இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
ஈரோடு, கொங்கு, India
சும்மா அப்பிடியே சிரிச்சிகிட்டே போகவேண்டியது

ஞாயிறு, 29 ஜூலை, 2012

ரொம்ப நளாச்சு என்ன சொல்ல இருக்கு அன்னா ஹசாரே  உண்ணா விரதம் நமக்கு என்ன சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு கேஸ் விட்டு தூங்க வேண்டியது தான் கொஞ்சம் சப்போர்ட் பன்னுங்கப்பா


திங்கள், 5 ஜூலை, 2010

எச்சரிக்கை

இந்த தளத்தில் பெரும் பகுதி குப்பை.இது தொழில் கற்றுக்கொள்ள ஒரு சோதனை முயற்சி மட்டுமே.சில சமயம் என் தொழிலான ஹோமியோபதியில் இருந்து சில பயனுள்ள குறிப்புகளையும் கலந்து கட்டி அடிக்க உத்தேசம். தப்பித் தவறி யாராவது பின்னூட்டம் போட்டுவிட்டீர்கள் என்றால் முழு வீச்சில் இறங்கி விடுவேன். சாக்கிரதை

திங்கள், 26 ஏப்ரல், 2010

கேதான் தேசாய்

அன்பு உ பி களே ர ர களெ தோழர்களே நமது தனைத்தலைவர் அஞ்சா நெஞ்சன் கேதான் தேசாய் அவர்களை கைது செய்த வன் கொடுமையை எதிர்த்து இந்த மாபெரும் பேரணியை திரட்டியுள்ளோம்.இந்த அரசை அறைகூவல் விடுத்து கேட்கிறோம். என்ன தவறு செய்தார் எங்கள் தலைவர் ?. தங்க கையிருப்பை அதிகப்படுத்தி இந்திய திரு நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்திக்காட்ட முயன்றது ஒரு தவறா ? இல்லை ரிசர்வ் வங்கிக்கு இணையாக ஒரு ஏழைக் குடிமகனும் 1800 கோடி ரூபாயை கையில் வைத்திருக்க முடியும் என்று நிரூபித்து காட்டியது ஒரு தவறா ?

என்னது எங்கள் இன்னுயிர் தலைவர் லஞ்சம் வாங்கினாரா ? லஞ்சம் வாங்கியது ஒரு தவறா ?. லஞ்சம் வாங்குவது என்பது ந்ம் தாய் திரு நாட்டின் பாரம்பரிய கலாச்சரம் என்பதை மறந்து விட்டு லுச்சா தனமாக பேசாதீர்கள்.அவர் செய்துள்ள சேவைகளை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.தன்னுடைய அளவற்ற சேவை பணிகளுக்கிடையில் தன்னுடைய அலுவலக மாடியில் மஜாஜ் சென்டர் நடத்தி வந்த மாமனிதனை மனித நேய பேரரசை கைது செய்தது வெளி நாட்டு சதி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறோம்.
வருங்கால பிரதம மந்திரி குடியரசுத்தலைவர் கேதான் தேசாய் அவர்களை விடுதலை செய்வதோடு அவருக்கு மருத்துவத்தில் நோபல் பரிசு கொடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக உடனடியாக நியமிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.

இப்படிக்கு
அகில இந்திய லஞ்சம் வாங்குவோர் சங்கம்

சனி, 24 ஏப்ரல், 2010

அப்பாடி எப்படியோ நானும் வந்துட்டனுங்கோவ். இனி படபடன்னு எழுதி குமிச்சிட வேண்டியதுதானே. ஏனுங்கண்ணா இந்த நோபல் பரிசு புக்கர் பரிசு ஆஸ்காரு இதெல்லா பணங்காச குடுப்பங்ளா ? இல்ல சும்மானாச்சி காயிதம் கீது குடுத்து முடுக்கியுற்றுவங்களா ? நம்முளுக்கு ஒடனெ எல்லாம் வேண்டாமுங்க ஒரு மூனு
நாலு மாசம் பொறவு குடுத்தா போதுமுங்கோவ்.

அதெல்லாம் சரிங்க. விசியத்து வருவம். எல்லா கருமாந்திரத்த பத்தியும் எல்லாரும் எளுதி முடிச்சி கட்டி போட்டிங்க. இனிமே நா என்னாத்த எளுதி எப்பங்க
இந்த ஹாரிபட்டரு எளுதின அம்மினி மாதிரி காசு பணம் சம்பரிக்கிறது போங்க.செரிசெரி நா எதொ எளுதறேன் .கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி எதாவது ஒரு பிரைஸ் வாங்கி குடுதுருங்கோவ்
அப்பறம் அட இங்க பக்கத்தில வாங்க ஒரு விசியம் சொல்லோனும். இந்த செயமோகன் ராமகிருஷ்ணன் சாரு இவியெல்லாம் நா எளுதரென்னு தெரிஞ்ச
பொறவு பயிந்து கழிஞ்சு போயிட்டாங்க்களாம. பசக சொன்னானுக.நா அவிங்களை ஒன்னும் பண்ண மாட்டன் .தெகிரியமா இருக்கச் சொல்லுங்கோவ்
அப்பறமா வாரணுங்கண்ணா வருட்டுங்க்ளா